{
  "bookName": "அரப்பள்ளி",
  "authorName": "அருட்திரு. ஜோர்ஜ் K. வர்கீஸ்",
  "publisherName": "உயர் அருட்திரு. பஸிலியீஸ் ரம்பான்",
  "publicationYear": 2010,
  "chapterNumber": 3,
  "chapterName": "திருவிதாங்கோடு தேவாலயம் சரித்திர ஏடுகளின் மூலமாக",
  "pageFrom": 15,
  "pageTo": 28,
  "pages": [
    {
      "pageNumber": 15,
      "ocrText": "திருவிதாங்கோடு அரப்பள்ளி\nவரலாற்று சுவடுகளோடுகூடே....\nFr. மானோஜ் K. வர்க்கீஸ்\nகுலசேகரம்\nமுன்னுரை :\nமலங்கரை ஓர்த்தடோக்ஸ் சபைக்கு வரலாறு சேர்த்து வைத்த\nவரப்பிரசாதம் தான் திருவிதாங்கோடு புனித மேரிமாதா தேவாலயம்\nதோமையாருடைய கைப்பட்ட இந்த தேவாலயம் அதிக காலம் மறைவாக\nகாணப்பட்டது. சிப்பிகளுக்கு உள்ளே உள்ள முத்து யாருடைய கண்ணில்\nபடாமல் இருந்தாலும் இறுதியில் அரசனின் நெஞ்சில் திளங்குவது போல\nகிறிஸ்தவ சபையுடைய விலை மதிக்கத்தக்க புனித தலமாக\nவிளங்குகிறது. இந்த சிறிய தேவாலயம் நுற்றாண்டுகளுக்கு முன்பே உள்ள\nகருங்கல் தூண்களும் கல்சுவருகளும், கற்சிற்பங்களும் பழமையுடைய\nதனிமையோடு நிலைநிருத்திருக்கின்ற உலகத்தின் அபூர்வ\nதேவாலயத்தில் ஒன்றாக இது உள்ளது.\nதோமையார் திருவிதாங்கோடு தேவாலயம் நிறுவியது என்பது\nஒரு கதையாக கருதுபவர்களும் உண்டு ஆனால் இது உண்மையானது\nஎன கூற வரலாறே சான்று\nதற்போதுள்ள தேவாலயம்\nதமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்ற\nபகுதியில் இருந்து இரண்டு கிலோ.மீ மேற்காக திருவிதாங்கோடு என்ற\nகிராமத்தில் உள்ள அரபள்ளி என்று அறியப்படுகிற புனிதமேரிமாதா\nதேவாலயம் உள்ளது. ஒரேகண்ணோட்டத்தில் ஒரு இந்துமத கோவிலின்\nதோற்றத்தில் காணப்படுகிற இந்த தேவாலயம் மற்ற ஆராதனை\nஆலயங்களை விட மிக சிறியது. 25 சென்ட் இடத்தில் இந்த தேவாலயம்\nஅமைந்துள்ளது. 25 அடி நீளமும் 16 அடி அகலமும் 10 அடி உயரமும்\nகொண்ட தேவாலயம் அதனுடைய பழமையை நிலைநாட்டி பலிபீடத்தின்\nமுன்பகுதியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதை உணர முடியும்.\n15",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 16,
      "ocrText": "கருங்கல்லினால் அமைத்த சுவருகள் 2.5 அடி கனமும் 10 அடி\nஉயரமும் உள்ளது. அதில் 5 இஞ் 7 இஞ் அகலமும் உயரமும் உள்ள\nஇரண்டு வாசல்களும், 20 இஞ் அகலமும் 4 அடி 9 இஞ் உயரமும்\nஉள்ள இரண்டு கதவுகளும் உண்டு. முக்கிய வாசல் 5.5 அடி உயரமும்\n2.75 அடி அகலமும் உள்ளது ஆகும். இதில் உள்ள கிளிவாசல்கள்\nபுராதன அரண்மனைகளில் காணப்படும் வகையில் உள்ளவையாகும்\nதேவாலயத்தினுடைய மேற் கூரைக்கு பழைய எருசலேம்\nதேவாலயத்தினுடைய மேற்கூரைக்கு அதிக ஒற்றுமை உண்டு\nமுக்கியவாசலின் முன்புறத்தில் பரிசுத்த பலிக்கு உபயோகமான\nஅப்பத்தினுடையவும் இரசம் பருகுகின்ற கிண்ணத்தினுடையவும்\nஅதனுடைய இரண்டு பக்கங்களிலும் ஜெபிக்கின்ற தூதர்களின்\nஉருவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சுவரில் சிறிய சிலுவையின்\nஉருவம் அல்லாமல் இயேசுவினுடையவோ மாதாவினுடையவோ மற்று\nசீடருடையவோ உருவங்களோ படங்களோ அங்கே இல்லாதது கிறிஸ்தவ\nசபை ஆராதனைகளும் மற்றும் வழிபாட்டு முறைமைகளும்\nபின்பற்றுவதற்கு முன்பே உள்ள தேவாலயம் என்பது நமக்கு\nதெளிவாகின்றது (சிந்தனையே பின்தொடர்கிறது).\nசிறிய பூக்களுடைய சித்திர வேலைப்பாடுகள் கூடிய சிறியதும்\nஅதே வேளையில் பழமையானதுமான திருமுழுக்கு தொட்டி பழமையின்\nசின்னமாக ஹைக்கலானுடைய வலது பக்கத்தில் இருக்கின்றது\nஹைக்கலானுடைய நடுவில் காண்கின்ற சித்திர வேலைப்பாடுகளுடைய\nமேசையின் வடிவத்தில் உள்ள போர்த்துகீசியர் தேவாலயத்திற்கு\nஅளித்தாக கருதப்படுகிறது. இதனுடைய முன் பக்கத்தில் திறவுகோல்\nபிடித்து நிற்கின்ற பேதுருவுடையவும், வாள் ஏந்தி நிற்கின்ற பவுலுடையவும்\nபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்து பெலிக்கல் பறவையின்\nசித்திரம் காணலாம். தன் குஞ்ஞுகளுக்கு மார்பு பிளர்ந்து இரத்தம்\nகொடுக்கின்ற பறவையினுடைய படம். இயேசு கிறிஸ்துவினுடைய\nகல்வாரியிலே தியாகத்தினுடைய நினைவாக தொடக்ககால சபை\nகருதுகிறது. பீடத்தினுடைய இன்னொரு பக்கத்தில் பெரிய ஒரு\nசிலுவையும் அதற்கு கீழே சம்மனசக்கள் பறவைகள் தாவரங்கள்,\nஇரண்டு தலை ஓடுகளுடைய படங்கள் காணமுடியும். பீடத்தில்\n16",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 17,
      "ocrText": "காண்கின்ற எழுத்துகள் எந்த மொழி எழுத்தென்று புரிந்து கொள்ள\nஇயலவில்லை. பார்வையில் லெத்தீன், போர்த்துகீஸ் மொழி போன்றோ\nதோன்றுகின்ற எழுத்துகள் ஏராளமான வெளிநாட்டு ஆராய்ச்\nசியாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இந்த பீடத்தில் உள்ள\nஎழுத்துகளுக்கும் படங்களுக்கும் எந்த விதத்திலான நிறம் பயன்படுத்தி\nஇருக்கிறார்கள் என்று உறுதி படுத்த இயலவில்லை. எனினும் இன்றும்\nஅவை தங்கத்தினுடைய நிறம் போல திளங்குகின்றது.\nபோர்த்துகீசியருடைய தனிப்பட்ட அன்பளிப்பு என கருதபடுகிற\nபஞ்சலோகத்தில் செய்த சின்ன தூபகலசமும் இங்கே பாதுகாக்கப்\nபடுகிறது. தேவாலயத்தினுடைய பின் பக்கத்தில் உள்ள சுவரின்\nஉயரத்தில் பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்று உள்ள மூன்று\nவடிவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் மேற்கு\nபக்கத்தில் உள்ள நீர் தொட்டி தோமாயாருடைய காலத்தில் கால் கழுவ\nபயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கருங்கல்லினால் செய்த\nபீடம் கால் வைக்கவும், தண்ணீர் ஒழுகி செல்ல விதத்தில் செய்யப்பட்டது\nஇன்று வ வரை பாதுகாக்கப்படுகிறது. தேவாலயத்தினுடைய\nஅருகாமையில் உள்ள கிறிஸ்தவர்களுடைய வீடுகளில் நடைபெறுகிற\nதிருவருட்சாதன விழாக்களில் இன்றும் கால் கழுகுதல் பெரிய\nமுக்கியதுவம் உள்ள ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. இவ்வளவு\nமுக்கியத்துவமும் பழைய கால பொருட்களை உடையதுமான\nஇத்தேவாலயம், நீண்ட காலம் மறைவாக இருந்தது என்பது\nஆச்சரியமாக உள்ளது.\nவரலாற்று ஆதாரங்கள்..\nகேரளத்தில் முதல் கிறிஸ்தவர்களை குறித்து கிடைத்திருக்கின்ற\nஆதாரங்கள் மிக முக்கியதுவம் வாய்ந்தவை ஆகும். போர்த்துக்கீஸ்\nமிஷனறிகளின் எழுத்துகளும் மற்ற ஆதாரங்களும் கி.பி. 16-ம்\nநூற்றாண்டில் மெனாசீஸ் ஆண்டகை கிரந்த நவீகரணத்துக்கு முக்கிய\nவழிகாட்டி கொடுத்தவராவர். பிரான்சீஸ்கோ டீறோஸ் தொடக்கக்கால\nகிறிஸ்தவ குடியேற்றத்தை குறித்து உள்ள காரியங்கள் அவருடைய\nகிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லுகிறது மைலாப்பூரில் உள்ள\nகிறிஸ்தவர்கள் கேரளத்தின் பல இடங்களில் குடியேறியதாக கூறுகிறார்.\n17",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 18,
      "ocrText": "அதில் கொடுங்கல்லூரும், கொல்லத்திலும் உள்ள மக்களின்\nவிசுவாசமும் வழிபாடும் காக்கப்பட்டன. ரோஸனோபோல தான்\nபண்டைய போர்த்துகீஸ் மிஷனறிகளான பிரான்சீஸ்கோயும்,\nடைனீஷாயுடையும், ஆன்றணியோ, கவ்யாவினுடையும் கடிதங்களில்\nஇதே கருத்துக்களை காணலாம். ரோஸினுடைய கடிதங்களில்\nதிருவிதாங்கோட்டு கிறிஸ்தவர்களை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nகொடுங்கல்லூரும், கொல்லமும் கூடாத தொருமலையும், பேய்ப்பூரும்,\nதிருவிதாங்கோடும் மைலாப்பூரில் நின்று வந்த கிறிஸ்தவர்கள்\nகுடியிருக்க துவங்கினார்கள். மைலாப்பூரில் கிறிஸ்தவர்கள் குடியேறி\nபார்ப்பதற்கு இந்த இடத்தை தேர்தெடுத்தார். காரணம் அங்கே கிறிஸ்தவ\nமக்கள் நிலை கொண்டதும் றோஸினுடைய ஆதாரங்கள்படி\nகொல்லத்திலும் கொடுங்கல்லூரில் உள்ள கிறிஸ்தவ மக்களின்\nசெயல்பாடுகள் மந்தமாக காணப்பட்டதுமாகும்.\nபின்பு ஆர்ச்சு பிஷப்பு மெனஸீனுடைய காலத்தில் இவர்களை\nரோமா சபையில் கொண்டுவருவதற்காக சில முயற்சிகள் நடத்தியதாக\nதெரிந்து முப்பது வருடம் முன்பு மாத்யூஸ் என்ற ஒரு பாதிரியார்\nதிருவிதாங்கோடு வந்ததாகவும் அவர் சுமார் முந்நூறு ஆட்களுக்கு\nதிருமுழுக்கு கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.\nMichael Geddis @ The history of the church in\nMalabar என்ற புத்தகத்தில் சுனுகோதோஸினுடைய 8-ம் பாகம் 6-ம்\nபத்தியில் இவ்வாறு காணப்படுகிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு\nமுன்பு நல்ல ஒரு பகுதி விசுவாசிகள் மற்ற ஜாதிகளோடு சென்றனர். பிற\nகோவில்களில் இருந்து அருட்பணியாளர்களை எந்தநேரமும் அங்கே\nஅனுப்பாததுமே இதன் காரணம். விசுவாசிகளுக்கு திருமுழுக்கு\nகொடுப்பதற்கு தேவையான அனுமதி திருவிதாங்கூர் அரசரிடமிருந்து\n(உத்தரவு ஓலை) மெனாஸீஸ் பெற்றிருந்தார்.\nகி.பி. 1518- போர்த்துகீஸ் மிஷனறி ஆன துவாத்தே பார்போஸா\nகன்னியாகுமரிக்கு அடுத்துள்ள அர்மோனியாக்களின் தேவாலயம்\nஇருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அங்கே ஆராதனை நடந்தது\nஎன்றும் பலிபீடத்தில் சிலுவைகள் உண்டு என்றும் அவர்\n18",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 19,
      "ocrText": "குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல ஊர்மக்களாகிய மீனவர்கள் அங்கே\nஆராதனையில் பங்கேற்றிருந்தார்கள் என்றும், லத்தீனில்\nஎழுதப்பட்டுள்ள ஒரு கல்லறை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்\nகுறிப்பிட்டிருக்கிறார். அங்கே ஒரு போர்த்துகீஸ் மிஷனறி அந்த தரிசா\nபள்ளியில் வேலை செய்ததாகவும், அங்கே முகமதியனும் இந்துக்களும்\nதங்குவதாகவும் பாபோஸா குறிப்பிட்டுள்ளார். அங்கு உள்ள மக்களைப்\nபற்றியும் கோவிலுனுடைய காரியங்களை கவனிக்கின்ற ஒரு மார் தோமா\nகிறிஸ்தவனை பற்றியும் அவர் குறிப்பிடுகின்றார்.\nசென்னை அரசாங்கம் கி.பி. 1718 -ல் வெளியிட்டுள்ள Dutch in\nMalabar என்ற புத்தகத்தில் Adrian moens என்ற அந்த கவர்னருடைய\nஎழுத்துகளில் திருவிதாங்கோடு விசுவாசிகளை பற்றியுள்ள செய்தி அதிக\nமுக்கியத்துவம் பெறுகிறது. அவர் இவ்வாறு எழுதுகிறார். கி.பி. 1599-ல்\nஅர்க்காதியாக்கோன் ஜார்ஜ்-யையும், சபையையும் ஆர்ச் பிஷப் மெனாஸீஸ்,\nஜெவீட் பாதிரியார், திறமை சாலியும், இறை வல்லுனரும், மொழி\nபண்டிதனுமாகிய றோஸினுடைய (Ross) ஆதரவோடு ரோமினுடைய\nசபையின் கீழில் கொண்டுவரப்பட்டது. ஆனால் கன்னியாகுமாரி அடுத்த\nதிருவாங்கோட்டில் உள்ள தருதாய்க்கன் மாறா என்று அறியப்படுகிற தோமா\nகிறிஸ்தவர்களை அவர்களால் தன்வசப்படுத்த முடியவில்லை.\nஇதில் இருந்து தெளிவாகிறத என்னவென்றால் உதயம் பேரூர்\nசுன்னகதோஸுக்கு முன்பு திருவிதாங்கோட்டில் தோமா கிறிஸ்தவர்கள்\nஎன்ற சிறிய கூட்டம் இருந்தது. ஜெவீட் பாதிரியார்கள் கடினமாக\nஉழைத்தும் அவர்களால் தோமா கிறிஸ்தவர்க்ளை கத்தோலிக்க\nநம்பிக்கையில் கொண்டுவரமுடியவில்லை. பிறகு இவர்கள் வெளிநாட்டு\nமிஷனறிகளின் வசம் ஆனார்கள். பிறகு அவர்களில் நின்றுள்ள\nஅவமானங்களை தொடர்ந்து தோமா கிறிஸ்தவர்கள் ஆக மாறி\nநின்றார்கள் என்று கருதப்படலாம். கி.பி. 18-ம் நூற்றாண்டில் மலங்கரை\nசபையினுடைய ஆதாரங்களில் திருவிதாங்கோட்டை பற்றியுள்ள\nகருத்துக்கள், அவர்களை மீண்டும் சுறியானி சபையுமாக ஒன்று சேர்ந்தது\nஎன கருதப்படுகிறது.\n19",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 20,
      "ocrText": "மலங்கரை சபை நிலைநாட்டுகிற பாரம்பிரியம் :\nகி.பி. 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில சுரியானி\nஎழுத்துகளில் நின்று கிடைத்தது. கி.பி. 1705 ல் வாழ்ந்த மார்\nகப்றீயேலுனுடைய சுறியானி கடிதத்தில் இவ்வாறு காணலாம்.\nகிறிஸ்துவுடைய பிறப்பின் 52- ஆண்டுகளுக்கு பிறகு அப்போஸ்தலரான\nபுனித தோமையார் மைலாப்பூர் கோரமண்டல கடற்கரையில்\nவந்திறங்கினார். அவர் அங்கே நற்செய்தி போதிக்கவும் தேவாலயம்\nதுவங்கவும் செய்தார். அதே போல் கோட்டைக்காவு ரெப்போலியும்,\nகோதமங்கலமும், பெர்னாற்றாவும் திருவிதாங்கோட்டிலும் கோவில்\nதுவங்கினார்.\nமிங்கானுடைய Early spreed of christianity in india என்ற\nபுத்தகத்தில் இரண்டு இடங்களில் திருவிதாங்கோட்டையும்\nதோமையாருடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்துகின்ற சுறியானி\nஆதாரங்களும் காணப்படுகிறது.\nமலபாரில் நின்றுள்ள யாக்கோபையா இந்தியாக்காரனுடைய\nசுரியானி கடிதத்தில் காணப்படுகிற, கி.பி. 52-ம் ஆண்டில் புனித\nதோமையார் பாரத்திலுள்ள மைலாப்பூரில் வந்து அங்கே அவர்\nபிதாவுனுடையயும் சுதனுடையும் பரிசுத்த ஆவியினுடையும்\nநாமத்தினால் அனேகம் மக்களை திருமுழுக்கு கொடுத்து, பிறகு அவர்\nமலபாரில் மாலியாக்கரையில் வந்தார். அங்கே இரண்டு பேருக்கு பட்டம்\nகொடுத்தார். அவர் பிறகு குற்றிகாயில் வந்து அங்கே ஒரு கோவில்\nதுவங்கினார். அதேபோல் தான் ரெப்பேலியிலும், கோதமங்கலத்திலும்,\nநிரணத்திலும் திரபாகோட்டிலும் கோவில் துவங்கினார். கி.பி. 1721-ல்\nதோமஸ் நான்காம் என்ற ஆயர், டச் கவேசகனாக லீட் சிலே கார்லோச்\nஸ்தாபி (Carolous schaaf of leiden) தோமையாரைகுறித்து உள்ள\nபாரம்பரியத்தை பற்றி எழுதி, தோமையார் நிறுவிய 7 கோவில்கள்\nமுதலில் மைலாபூர் பிறகு கொடுங்கல்லூர், கரகார், இரப்போலி,\nகோதமங்கலம், நிரணம், திரம்பக்கோடு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கி.பி\n18-ம் நூற்றாண்டில் எழுதிய மலங்கரை சபை வரலாறினுடைய\nகையெழுத்து புத்தகத்தில் தோமையார் நிறுவின கோவில்கள் 6 என\nகுறிப்பிடப்பட்டுள்ளது.\n20",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 21,
      "ocrText": "1. மாலியங்கரை,\n2. கொட்டக்காவு,\n3. எடப்பள்ளி,\n4. கோதமங்கலம்,\n5. நிரணம்,\n6. திருவிதாங்கோடு.\nஇவை எல்லாம் பொதுவானவை மலங்கரை சபையில் கி.பி. 17,18\nநூற்றாண்டுகளில் தோமையார் நிறுவின ஆலயங்களைப் பற்றி சரியான\nகணக்குகள் இல்லை அதிலேயே முக்கிய இடங்களில் திருவிதாங்கோடு\nதேவாலயத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளது.\nசங்ககால கிறிஸ்தவம் :\nகேரளத்தின் வரலாறு படிப்பவர்களுக்கு தவிர்க்க முடியாத\nவரலாற்று உண்மைகளை புராதன தமிழ் ஆதாரங்கள் மூலமாக\n(சங்ககால சுவடிகளில்) தெளிவாக உணர முடிகிறது. இதில்\nமுக்கியமானது பதிற்றிப்பத்து என்ற சுவடு ஆகும். இது சேரநாட்டின்\nமுதல் பத்து அரசர்களின் ஆட்சியைப் பற்றியுள்ள பாடல்கள் ஆகும்.\n10 பாடல்கள் வீதம் 10 அதிகாரங்கள் கொண்டதால் இதனை\nபதிற்றிப்பத்து என்று அழைக்கப்படுகிறது. இதில் முதல் மற்றும் பத்தாவது\nஅதிகாரங்கள் தொலைந்து விட்டது. ஆனாலும் கேரளத்தினுடையவும்\nஅதை சுற்றியுள்ள பகுதிகளுடையவும் வரலாற்றைப் பற்றியுள்ள\nசெய்திகள் இதில் இருந்து கிடைக்கின்றது மற்றும் முக்கிய சுவடிகள்\nஅகநானூறும் புறநானூறும் இதிலிருந்து சேர மன்னன் சேரன்\nசெங்குட்டுவனின் காலக்கட்டம் ஏறத்தாழ A.D 155 ற்கும் 210ற்கும்\nஇடைப்பட்ட காலமாகும் என நம்பப்படுகிறது. ஏனெனில் மன்னனின்\nநண்பராக இருந்த இலங்கை மன்னன் கஜபாகுவின் காலம் A.D 173 - 195\nவரை ஆக இருந்தது. இந்த ஆதாரத்தினின்றும் மற்ற தெளிவுகளி\nலிருந்தும் சேர மன்னர்களுடைய ஆட்சி காலம் அறியப்படுகிறது.\nதோமையார் வந்தார் என்று விசுவசிக்கும் காலக்கட்டத்தில் சேர\nநாட்டை ஆண்டது இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற\nமன்னனாகும். அவருடையக்காலக்கட்டம் A.D 7முதல் 65 வரை என\nகருதப்படுகிறது. சேர நாட்டின் மிகவும் சிறந்த மன்னர்களில் ஒருவராக\nநெடுஞ்சேரலாதன் இருந்தார்\nசேர மன்னராகிய செங்குட்டுவனின் இளைய சகோதரனான\nஇளங்கோவடிகள் இயற்றிய நூல் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகும்.\n21",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 22,
      "ocrText": "சங்ககால கவிஞர்களாகிய பரணர், கபிலர், ஒளவையார், அகஸ்தியர்\nபோன்றவர்களின் எழுத்துகளிலும் பண்டையக் காலத்தின் நாகரிகத்தைப்\nபற்றியும் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் அறிய முடிகிறது.\nஇமையவரம் பன் நெடுங்சேரலாதன் காலத்தில் நாடு மிகவும்\nசெழிப்பாய் இருந்தது. அவர் ரோமன் நாடுகளில் உள்ளவர்களுடன்\nவியாபார தொடர்பு கொண்டிருந்தார் என்பதைப் பற்றிய ஆதாரங்கள்\nஉள்ளன. பிளீனிக்கன் எழுத்துக்கள், ரோமன், கிரேக்க ஆதாரங்கள்\nமுதலியவை. அது மட்டுமல்ல பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள\nஅரிக்கமேடு என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட ஆதாரங்களைக்\nகொண்டு முதல் நூற்றாண்டில் ரோம் செங்கல் கொண்டு கட்டிய\nகட்டடங்கள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றது.\nஅகநானூறில் எப்படி ரோம கப்பல்கள் கேரளத்தின் கடற்கரையில் வந்து\nதங்கம் மற்றும் வாசனைப் பொருட்களை பண்டமாற்று முறையில்\nவியாபாரம் செய்தது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளத்தின்\nபல பகுதிகளிலிருந்தும் கிடைத்துள்ள முதல் மற்றும் இரண்டாம்\nநூற்றாண்டின் நாணயங்களும் முக்கிய ஆதாரங்களாக உள்ளது.\nஇதில் முக்கியமான குறிப்பு சேர அரசின் முதல் தலைநகரம்\nதிருவிதாங்கோடு பகுதியாய் இருந்தது. அதனால் தான் அதன் பக்கத்தில்\nஉள்ள சின்னமுட்டம், குளச்சல் போன்ற புராதன துறைமுகங்களுக்கு\nமுக்கியத்துவம் கிடைத்ததாக பதிற்றிப்பத்து விவரிக்கின்றது.\nஇமயவரம்பன் உதயன் சேரனின் மகன் முதல் நூற்றாண்டின் 2 ஆம்\nபகுதியில் ஆட்சி புரியும் போது பெரிய கோட்டைகளுக்கும்\nதேவாலயங்களுக்கும் அரசமாளிகைகளுக்கும் ஆக ஏராளமான\nகாடுகள் வெட்டி அழிக்கப்பட்டது. பொதுவாக காணப்படுவது முதல்\nநாற்றாண்டுகளில் கேரளமக்களுக்கு மதம் ஒன்றும் இல்லை அவர்கள்\nகேரளர், இயற்கை மத விசுவாசிகளாக காணப்பட்டனர். இதில்\nபயன்படுத்தும் வார்த்தை கடவுள்மனை என்ற சொல்லக்கு பொருள்\nஎன்னவென்றால் எல்லாம் எல்லாம்மான கடவுள் ஆகும். மனை என்ற\nசொல்லுக்கு வீடு என்பது பொருள்.\nஇது எந்த தேவாலயம் என்று சிந்திக்கும் பொழுது\nவடஇந்தியாவில் உருவகிவரும் புத்த, ஜெயின, ஆரிய மதமாக வழி\n22",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 23,
      "ocrText": "இல்லை ஏனெனில் அவர்களுக்கு கடவுளின் ஆலயம் என்ற நினைவு\nஇல்லாமல் இருந்தது. இங்கே தான் அந்தக் காலக்கட்டத்தில் கிறிஸ்துவின்\nசீடனாகிய தோமையார் நற்செய்தி பரப்புவதற்காக வந்தார் என்ற\nமுக்கியத்துவம் பெறுகிறது. அவர் தேவாலயம் நிறுவினார் என்ற\nபாரம்பரியத்திற்கும் இதுவும் சேர்த்து சிந்திக்கும் பொழுது அவருடைய\nபெருமை தெரிகிறது. இமையவரம்பன் கிறிஸ்துவின் சீடரான\nதோமையாரின் செயல் பாடுகளில் விருப்பமுடையவராகி ஆராதனை\nஆலயங்கள் கட்ட உதவினார் என்பது மறுக்க முடியாதது. அது\nமட்டுமல்ல மன்னர்கள் உட்ப்பட அனைவரும் இந்த புதிய விசுவாசிகளின்\nவாழ்க்கை முறைகளைக் கண்டு அவர்களை மிகவும் மதித்து இருந்ததனர்\nஎன்று அறிய முடிகிறது. இவர்களை சான்றோர் என்று\nஅழைத்திருந்தனர் சங்ககாலத்தில் பல இடங்களிலும் சான்றோர்\nகளுடைய வாழ்க்கை முறையைப் பற்றியும் அவர்களுடைய\nசெயல்பாடுகளைப் பற்றியும் மிகவும் போற்றத்தக்க முறையில்\nவிவரிக்கப்பட்டுள்ளது. நாச்சிலீயார் என்ற கவிஞர் சேரலாதனை\nசான்றோர் புரவலர் என்று அழைக்கிறார். இதன் பொருள்\nசான்றோர்களுடைய பாதுகாவலன் என்பதாகும். கவிஞர் கபிலர்\nஅழியாதனை கூறுவது சான்றோர் பெருமகன் (சான்றோரின்) மகனாகிய\nமகன் என்பதாகும். சான்றோர் என்ற வார்த்தைக்கும் Sanctus என்ற\nவார்த்தைக்கும் இடையில் பொருத்தம் உண்டு என்பதை அறிய\nமுடிகிறது.\nவிவிலியத்தின் பெயரோடு தொடர்புடைய பெயர்கள் இந்த\nபகுதிகளில் நிலைத்திருப்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஆதம் (ஆதாம்)\nஎவா (ஏவா) மூஸ் (மோசே) போன்ற பெயர்களோடு திராவிட\nதேவதைகளாகிய மாரியம்மா, எல்லாம்மா, (மரியா, எலிசபத்) என்ற\nபெயர்களும் கிறிஸ்தவ பெயர்களோடு தொடர்புடையது.\nஅந்தக்காலத்தில் பிணங்களை அடக்கிய கல்லறைகளின் வடிவமும்\nகிழக்கு மேற்காக பிணங்களை அடக்குவதும் பாலஸ்தீனியர்களின்\nபழக்கத்தோடு மிகவும் பொருத்தம் முடையது.\nசங்ககாலத்தில் பல இடங்களிலும் கிறிஸ்துவைப் பற்றிய வரிகளும்\nசான்றோர்களை புகழ்த்தும் வரிகளும் கவிஞர்கள் எழுதி இருந்தனர்.\n23",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 24,
      "ocrText": "தொல்காப்பியம் சொல் அதிகாரம், 24-ஆம் வரியில்\nமன்னாப்பொருள் அன்னை இயேற்றேன் என்று எழுதி இருக்கிறது.\nஇதன் பொருள் தொல்காப்பியத்தை விவரிப்பவரான இளம் புரனரும்\nசோனா வரையரும் விவரிப்பது இது இல்லப்பொருள் என்பதாகும்\nநச்சினார்க்கினியர் இதனை விவரிப்பது நினையாப்பொருள்\n(பாதுகாக்கமுடியாதது) என்பதாகும்.\nபுனிதயோவான் எழுதிய நற்செய்தியில் காணும் திருச்சட்டம்\nமோசே வழியாக வந்தது கிருபையும் உண்மையும் ஏசு வழியாக வந்தது\nஎன்ற கருத்தை பண்டைக்காலத்தமிழர் சான்றோரின் மெய்மற என்று\nசொல்லி இருந்தனர்.\nதிருக்குறளின் முதல்ப்பாட்டில் முதல் வரி\n“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு.”\nஇதன் பொருள் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குவது போல\nஇந்த உலகமும் இறைவனில் தொடங்குகிறது. இது புனித யோவான்\nஎழுதுவது போல அகரமும், கைரமும் நானே என்பதாகும்.\nபண்டைக்காலத்தமிழ் பேச்சுவழக்கில் ஹீப்ரு, அராமிய, அறபி,\nலத்தின் போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணமுடியும்.\nபல தமிழ் வார்த்தைகளுக்கும் கிறிஸ்தவ சொற்களுடன் தொடர்பு உண்டு\nசிலுவை என்ற சிரியன் வார்த்தை இன்றும் தமிழில்\nஉபயோகிக்கப்படுகிறது. நாடு என்ற வார்த்தையும் Nation என்ற\nசொல்லும் குரிசு என்ற வார்த்தையும் தரிசா என்ற வார்த்தையும் தம்மில்\nமிகுந்த ஒன்றுமை காணப்படுகிறது. இந்த கருத்துக்கள் தான் கிறிஸ்தவ\nகருத்துகளுக்குள் சங்ககால கவிஞர்களுக்குள்ள தொடர்பை\nகுறிப்பிடுகிறது.\nதமிழ் வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக்குவது திருக்குறள்\nஎழுதியது திருவள்ளுவர் ஆவார்.\nதோமையார் ஆலயமும் தோமையார் சிலுவையும் :\nகன்னியாகுமரிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள இடம் முட்டம்.\nஅங்கே மணக்குடி என்ற இடத்தில் புனித தோமையாரின் பேரில் ஒரு\n24",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 25,
      "ocrText": "தேவாலயம் உண்டு. இந்த பக்கத்தில் சின்ன முட்டம் என்ற புராதன\nதுறைமுகம் உண்டு. இங்கே கடலில் 300 அடி ஆழம் உண்டு. கப்பல்கள்\nகடற்கரைக்கு வந்துசேர தக்கவிதத்தில் இது இருக்கிறது. புனித\nதோமையார் சின்ன முட்டம் துறைமுகம் வழி இங்கே வந்தார் என்பது\nவரலாறு. இங்கே 15 அடி உயரம் உள்ள பெரிய கல்சிலுவை உண்டு. இது\nதோமையார் சிலுவை என்று அழைக்கப்படுகிறது. இங்கே காணும்\nதோமையார் கிணற்றின் தண்ணீர் பண்டைக்காலத்தில் கலங்கியதாகவும்\nஉபயோகிக்கமுடியாததுமாக இருந்தது. மக்களின் வேண்டுதலுக்கிணங்கி\nபுனித தோமையார் அதன் மேல் ஜெபித்தப்போது தெளிந்த நல்ல\nகுடிதண்ணீராக மாறியது. இந்த தண்ணீரை இன்றும் மக்கள் பக்தியுடன்\nஉபயோகிக்கிறார்கள்.\nதிருவிதாங்கோடு தேவாலயத்தின் புகழ் :\nபுனித தோமையார் பாரத நாட்டில் வந்தார் என்பதற்கான\nஆராதரங்கள் இன்றும் நிலை நிற்கும் கிறிஸ்தவ சமூகங்களும்\nமைலாப்பூரில் உள்ள கல்லறையும், புனித தேமையார் நிறுவினார் என்ற\nபாரம்பரியமுள்ள தேவாலயங்களும் ஆகும். அவரில் நின்று திருமுழுக்கு\nபெற்றதாக கருதப்படும் குடும்பங்களின் வரலாறுகளும் மற்றும் அவ்வாவி\nமக்களின் கலாச்சாரங்களும் அந்த முறையில் கட்டப்பட்டுள்ள\nதேவாலயம் தான் திருவிதாங்கோடு புனித மேரிமாதா தேவாலயம். முதல்\nநூற்றாண்டு முதல் இங்கே ஒரு கிறிஸ்தவ சமூகம் நிலை நின்றது\nஎன்பதற்கு பல ஆதாரங்களும் உண்டு.\nதிருக்குறள், பதிற்றுபத்து, தொல்காப்பியம், அகநானூறு,\nபுறநானூறு போன்ற தமிழ் காப்பியங்களில் கிறிஸ்தவ சிந்தனைகள்\nகிறிஸ்தவ சமூகத்தோடு தொடர்புள்ளவர்களோடு உள்ள தொடர்பு\nசுட்டிகாட்டப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் காணப்படும் பல சுரியானி\nஅரபி, கிரேக்கம் வார்த்தைகள் திரிஸ்சாய் என்ற சுரியானி\nவார்த்தைகளிலிருந்து தரிசாய், சிலுவையை சுட்டிகாட்டும் சிலுவை\nபோன்றவை கிறிஸ்தவர்களுடைய செயல்பாடுகள் சமூகத்தில்\nஅவர்களை குறித்து ஒரு நல் எண்ணம் கிடைக்கிறது.\nவாழ்க்கைப்பற்றி\nதிருக்குறளில் சான்றோர்களுடைய\nமதிப்பிற்குரிய சிந்தனைகளும் அவர்களை போல வாழவேண்டும் என்ற\n25",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 26,
      "ocrText": "எண்ணங்களும் முதல் கிறிஸ்தவர்களைப் பற்றியுள்ள சமூகத்தின்\nகண்ணோட்டத்தில் தெளிவாகின்றது.\nதிருவிதாங்கோட்டில் உள்ள தோமையார் இல்லம்,\nசின்னமுட்டம் தோமையார் சிலுவை, தோமையார் கிணறு, பொறையன்\nகால்வாய் முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருந்த திரிசாய் தெரு போன்ற\nஇடங்கள் புனித தோமையாருக்கு திருவிதாங்கோட்டோடு தொடர்பு\nஉண்டு என்பதும் இது ஒரு கற்பனை கதை இல்லை என்பதும்\nதெளிவாகின்றது.\nபோர்ச்சுகீஸிய குறிப்புகளில் புராதன சுரியானி கடிதங்களிலும்\nஉள்ள கி.பி. 1591-ல் உதயம் பேரூர் சுன்னக தோஸிலும், கி.பி. 1518 ல்\nபற்போதையின் நூலிலும் கி.பி. 1718 அட்றியன் மோயான்ஸ் என்ற\nஆளுநருடைய கடிதத்திலும் நான்காவது தோமையாரின் சுரியானி\nகடிதத்திலும் இந்த தேவாலயத்திற்கு அன்று மிக உயர்ந்த இடம்\nஉண்டாயிருந்தது என்பது தெளிவாகின்றது. அது மட்டுமல்ல இந்த\nகுறிப்புகளில் எல்லாம் இங்குள்ள கிறிஸ்தவ சமூகத்தினரின்\nமுக்கியத்துவத்தை விவரிக்கின்றது.\nஅப்படியென்றால் கி.பி. 18 - ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உள்ள\nவரலாற்று குறிப்புகளில் புனித தோமையார் நிறுவிய ஆலயங்களின்\nபெயரினின்று திருவிதாங்கோடு மெல்ல மெல்ல காணாமல் போனது\nகவனிக்க தக்கது. அது மட்டுமல்ல அதுவரை இல்லாதிருந்த\nதேவாலயங்களின் பெயர்கள் இந்த காலகட்டத்தில் கடந்து வந்ததையும்\nகாணலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது பற்றி இன்னும்\nதெளிவாகவில்லை. இந்த காலகட்டம்முதல் அதிக அளவில் வரலாற்று\nகுறிப்புகள் வெளிவந்தது. அது மலங்கரை சபையின் வரலாற்று\nஆசிரியர்களுடையது அல்ல என்பது கவனிக்கத்தக்கது. அதனால்தான்\nஇந்த புத்தகங்களில் புனித தோமையார் பாரம்பரியம் உள்ள\nதேவாலயங்களின் பெயர்கள் வேகம் காணாமல் போனதும்\nதிருவிதாங்கோடு காணாமல் போனதாகவும் கருதப்படுகிறது.\nஇந்த\nமலங்கரை சபையின் கட்டுப்பாட்டிலுள்ள\nதேவாலயத்தைப் பற்றி வேண்டிய அளவு கவனம் அன்று\nஇருந்தவர்களிடம் காணப்படவில்லை. அரசியல் சண்டைகளும் மற்றும்\n26",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 27,
      "ocrText": "முக்கியமான பிரச்சனைகள் உண்டாயிருந்ததினால் இந்த\nதேவாலயத்தின் சிறப்புகளை பற்றியோ, வரலாற்றைபற்றியோ வேண்டிய\nஅளவு விசாரிப்பதற்கு சூழ்நிலை இல்லாதிருந்ததென்று கருதலாம்.\nபுதிதாக்கும் பாதையில் ;\nதிருவிதாங்கோடு பகுதியில் உண்டான கொள்ளை நோய்களால்\nஏராளமான மக்கள் இறந்தனர். அதிக அளவில் மக்கள் பல\nஇடங்களிலும் குடிப்பெயர்ந்தனர் திருவனந்தபுரம், கொல்லம்,\nகார்த்திகப்பள்ளி, காயங்குளம் மற்றும் குண்டறை போன்ற இடங்களில்\nஇந்த பாரம்பரியம் உள்ள குடும்பங்கள் உண்டாயிருந்தது. இவர்கள்\nதிருவாம்கோடர் என்று அழைக்கப்பட்டனர். திருவிதாங்கோட்டில் ஒன்று\nஇரண்டு குடும்பங்கள் மட்டும் இருந்தது. அவர்களுக்கு தேவாலய\nஆராதனையை தொடர்ந்து நடத்த முடியாமல் இருந்தனர். ஆகவே\nஅதிக காலம் ஆலயம் அனாதையாய் கிடந்தது.\nகி.பி. 1927 - 28 இந்த காலகட்டத்தில் அன்று நாகர்கோவில்\nசெயல்பட்டுக்கொண்டிருந்த பொறியாளர் கே. கே. குருவிள என்பவரின்\nதலைமையில் சில திருப்பணிகள் நடந்தது. கருங்கல் கொண்டு\nவேயப்பட்டிருந்த மேல் கூரையில் ஒரு ஆலமரம் அபாயகரமாக\nவளர்ந்தது. ஆகவே மேல் கூரை பிரித்து ஓட்டினால் வேயப்பட்டு இன்று\nநாம் காணும் நிலையில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல பிளாஸ்டர்\nதொழிளாலர்களின் அறிவில்லாத காரணத்தினால் சுவரில்\nஉண்டாயிருந்த சில குறிப்புகள் நஷ்டப்பட்டது மீண்டும் அதிககாலம்\nதேவாலயம் கவனிக்கப்படாமல் கிடந்தது. பிறகு கி.பி. 1941 - ல் நீதிபதி\nகே. கே. லூக்காஸ் என்பவரின் தலைமையில் திருவிதாங்கோட்டில்\nகைவிட்டுபோன சொத்துகள் திரும்ப கிடைக்கும் படியாக முயற்சிகள்\nமேற்கொள்ளப்பட்டன. பஸேலியோஸ் கி வர்கீஸ் காதோலிக்க பாபா\nபுதுவையில் கோஷி கத்தனார் என்பவரை நியமித்து அனுப்பினார். பிறகு\nஅங்கு நியமிக்கப்பட்ட ஹீவர்கீஸ் ரம்பாச்சன் காலத்தில் கொஞ்சம்\nசொத்துக்கள் திரும்ப கிடைத்தது இன்று காணும் பலிபீடமும் மற்ற\nகட்டிடங்களும் புதிதாக கட்டப்பட்டடது. திருவிதாங்கோடு ஆலயத்தின்\nதிருப்பணிக்காக மத்திய திருவிதாங்கூரில் அங்கும் இங்கும் நடந்து அதிக\n27",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 28,
      "ocrText": "துன்பப்பட்ட மதிப்பிற்குரிய ரம்பாச்சன் என்பவர் இதற்கெல்லாம்\nதலைமைத்தாங்கினார். ஆனால் மீண்டும் தேவாலயம் சபையின்\nகவனிப்பில் நின்று அகன்று போனது. வணக்கத்திற்குரிய பர்ஸிலிபீ\nரம்பாச்சன் பொறுப்பேற்ற பிறகு தேவாலயத்தை சமூகத்தின் உயர்ந்த\nநிலையில் கொண்டுவந்தார். புனித மோறோன் மார் பஸேலியோஸ்\nதிதிமோஸ் பிரதமன் காதோலிக்க பாபா திருவிதாங்கோடு ஆலயத்தை\nசர்வதேச திருத்தலமாக அறிவித்தார். திருவனந்தபுரம் ஆயர் டாக்டர்\nகப்றீயேல் மார் கிறிகோரியோஸ் பிஷப்பு செயல் தலைவராக\nசெயல்பட்டார்.\nமுடிவுரை :\nபுனித தோமையாரும் திருவிதாங்கோடும் தம்மிலுள்ள தொடர்பு\nவரலாறுமாய் தொடர்புடையது மட்டுமல்ல சக்தி வாய்ந்த பகுதியாகவும்\nவிளங்குகின்றது. பாரம்பரியங்களும் புனித தோமையாருடன்\nதொடர்புடைய இடங்களின் பெயர்களும் சங்ககால காப்பியங்களில்\nகாணப்படும் தெளிவுகளும் புனித தோமையாரின் அரியணையில்\nபங்குள்ள மலங்கரை ஓர்த்தடோக்ஸ் சபை கொஞ்சம் தாமதமாக தான்\nஇந்த உண்மையை அறிந்தது வரலாற்றின் நீதி தெளிவாகிறது. இந்த\nஉண்மை உலகத்திலுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கிடைத்த மிக\nபெரிய வரபிரஸாதமாகும் என்பதில் சந்தேகமில்லை. இயேசு கிறிஸ்துவின்\nவிலாவில் தொட்ட கரங்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின்\nதூய்மை இங்கே சென்று வருபவர்களுக்கு நன்றாக தெரியும் ஏராளமான\nவிசுவாச சாட்சியங்கள் மக்களுக்கு அனுபவப்பட்டுள்ளது. இந்த\nகடிதமும் அந்த சாட்சியான ஒருவரால் எழுதப்பட்டது. ஊர்வசி சாபம்\nஉபகார பிரதம் என்பது போல அதிக காலம் ஆனதால் இன்றும் இந்த\nதேவாலயம் அதே பழமையோடு புதுதாக்கப்படாமல் நிற்கின்றது என்ற\nஎண்ணம் துன்ப நாள்களின் ஏற்படும் துன்பங்களை மாற்றுகிற ஒரு மிக\nபெரிய புண்ணியதலமாகும் என்பதில் சந்தேகமில்லை. புனித\nதோமையாரின் ஆசீர்வாதம் நாம் அனைவருக்கும் உண்டாகக்கடவது.\n28",
      "status": "completed"
    }
  ]
}