{
  "bookName": "அரப்பள்ளி",
  "authorName": "அருட்திரு. ஜோர்ஜ் K. வர்கீஸ்",
  "publisherName": "உயர் அருட்திரு. பஸிலியீஸ் ரம்பான்",
  "publicationYear": 2010,
  "chapterNumber": 2,
  "chapterName": "கிறிஸ்து சீடரான புனித தோமையாரின் திருவிதாங்கோடு தேவாலயம்",
  "pageFrom": 10,
  "pageTo": 14,
  "pages": [
    {
      "pageNumber": 10,
      "ocrText": "கிறிஸ்து சீடனாகிய\nபுனித தோமையாரின்\nதிருவிதாங்கோடு ஆலயம்\nஅருள்திரு பெர்சிலீபி றம்பான்\nநிர்வாகி புனித தோமையார் சர்வதேச திருத்தலம்,\nதிருவிதாங்கோடு\nநற்செய்தி பரப்ப நல்மகிழ்வுடன் AD 53-ல் இந்தியாவில் வந்த\nதோமையார் AD 63-ல் திருவிதாங்கோட்டில் ஒரு கோவில் நிறுவினார்.\nஇந்த கோவில் 20 நூற்றாண்டுகளுக்கு பின்னர் அதனுடைய ஒரு\nவரலாற்று சான்றாக இன்றும் நிலை நிற்கின்றது. கன்னியாகுமரி முதல்\nகாசர்கோடு வரை உள்ள பகுதியை சேர நாடு என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையாரின் காலயளவில் சேர நாட்டில் ஏழரை ஆலயங்களை\nநிறுவினார் என வரலாறு கூறுகின்றது. கெடுங்கல்லூருக்கு பக்கத்தில்\nஉள்ள மாலியங்கரை சாவக்காடு பக்கத்தில் உள்ள பாலையூர், வடக்கன்\nபறவூர் பக்கத்திலுள்ள கோக்கமங்கலம் நிரணம், கரிக்கோணி பக்கத்தில்\nஉள்ள கொல்லம், தங்கசேரி நிலைக்கல், சாயல் என்ற இடங்களில்\nதோமையார் ஆலயங்களை நிறுவினார். அரப்பள்ளி என்று\nதெரியப்படுகின்ற திருவிதாங்கோடு கோவில் முழுமையான ஒரு\nஆலயமாக நிறுவப்பட்டது.\nஅலயத்தின் அளவு :\n5.5 அடி நீளமும் 18 அடி அகலமுமான ஆலயம் 1 அடி\nஅகலமுள்ள கருங்கல் சுவருகளால் உருவாக்கப்பட்டது. உள்ளே\nகாணப்படுகின்ற கருங்கல் தூண்களுக்கு 2 அடி அகலமும் 8 அடி\nஉயரமும் உண்டு இதனுடைய மேல் கூரையும் கருங்கல் பாளிகள்\nகொண்டு வேயப்பட்டிருக்கிறது.\nஆலயத்தின் முன்வாசலில் 5.5 உயரமும் 2.5 அடி அகலமும்\nஉண்டு இதன் மேல் பகுதியில் புனித திருப்பலிக்கு உபயோகப்\n10",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 11,
      "ocrText": "படுத்துகின்ற அப்பக்கிண்ணத்தின் வடிவமும் அதற்கு இரு பக்கங்களிலும்\nகைகள் விரித்து செபிக்கின்ற இரண்டு தூதர்களும் விண்ணுல\nகைப்பற்றிய வடிவமுள்ள படங்களும் கருங்கல்லினால் செதுக்கி\nவைக்கப்பட்டுள்ளது.\nபோர்ச்சுக்கீசியர்கள் பரிசு கொடுத்த செபபீடமும் தூபகலசமும்\nகோவிலில் காணப்படுகிறது செப பீடத்தினுடைய இருபுறங்களிலும்\nசெய்துள்ள படங்களும் மக்களை அதிகம் வியப்புக்குள்ளாக்கியது. மரம்\nகொண்டு வேலை செய்த இந்த பேடகத்தினுடைய வாசல்களில் சாவி\nஏந்தி நிற்கின்ற புனித பேதுருவும் நற்செய்தியினுடைய சுழற்றிய\nவாளேந்திய புனித பவுலடியாரின் சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ள\nபேடகத்தின் பக்கவாட்டில் கிறிஸ்துவினுடைய சிலுவை மரணத்தை\nநினைவு கூருகின்ற விதத்தில் உள்ள இரண்டு படங்கள் உண்டு.\n1.\nஒரு பெலிக்கல் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு மார்பை குத்தி\nதிறந்து கடைசி துளி இரத்தம் வரையும் ஊற்றி கொடுத்து அவைகளு\nடைய தாகம் தீர்க்கிறது.\nகடவுள் தன்னுடைய கடைசி துளி இரத்தம் வரையும் தன்னுடைய\nமக்களாகிய நமக்கு அளித்ததின் நினைவாகும்.\n2.\nஒரு பினிக்ஸ் பறவை தீயில் எரிந்து அதனுடைய சாம்பலில் நின்று\nபுதிய ஒன்றுக்கு உருவம் கொடுக்கிறது போல, இயேசு கிறிஸ்து\nஉயிர்தெழுந்ததை நினைவுப்படுத்துகிறது.\nபெட்டகத்தின் உள்ளே பலகைகளின் சிலுவை\nஅடையாளங்கள் காணலாம். நடுவே உள்ள பெரிய சிலுவையினுடைய\nகீழ் இரண்டு தலையோடுகளுடைய படம் காணப்படுகிறது. பேடகத்தில்\nகுறிப்பிடப்பட்ட எழுத்துகள் இது வரையிலும் புரியவில்லை மூருங்கைச்\nசாறுகளால் இந்த படங்கள் வரையப் பட்டிருக்கின்றது. இன்றும் இது\nதங்க நிறத்தால் ஜொலிக்கிறது. ஜெபபீடத்தினுடைய பின் சுவரில்\nகருங்கல்லில் ஒரு சிலுவை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தூணுகளில்\nஉள்ள விளக்குகள், மின் விளக்குகள் வரும் முன் திரிபோட்டு எண்ணெய்\n11",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 12,
      "ocrText": "ஊத்தி வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது. பல விதமான பூக்களும் படங்களும்\nசிறிதாக கருங்கள் சுவர்களில் காணலாம்.\nபண்டைய காலங்களில் பயன்படுத்தியிருந்த திருமுழுக்கு\nதொட்டியும் ஆலயத்திலுனுள் பாதுகாக்கப்படுகிறது. ஆலயத்தின் வடக்கு\nபக்கத்தில் கால் கழுவுதற்கான ஒரு கல் தொட்டியும் முற் காலமுதல்\nஅதை பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nA.D 1-ம் நூற்றாண்டில் சேர மன்னன் இமய வரம்பன் நெடுஞ்சேர\nலாதன் இமயமலை வரை பயணம் சென்றதாகவும் அந்த பயணத்தில்\nகுந்தப்பர் அதாவது கோண்டகோறஸ் ராஜாவினுடைய விருந்தாளியாக\nதங்கினார் அந்த வேளையில் அங்கே இருந்த தோமையாருடைய\nஅற்புத ஜெபங்களை கண்டறிந்து அவர்களையும் கொஞ்சம்\nகுடும்பங்களையும் திருவிதாங்கோடு கொண்டு வரவும் செய்தனர். அரச\nகுடும்பங்களில் உள்ளவர்கள் அரசரின் அனுமதியோடு கிறிஸ்துவின்\nவழியில் சேர்ந்தனர்.\nதுவக்கத்தில் உதய சான்றோர் என்ற ஒரு மனிதன் அவருடைய\nமக்களை சான்றமான் மிகா, யாக்கோபு, சன்றமான் மிக அஸ்திரியாஸ்\nகஹிஷா என்ற பெயரில் குருக்களாக நியமித்தனர். (மன்மிக என்றால்\nஅரசகுலம் என்று பொருள்) இந்த குருக்களின் உறவினர்களுக்கு\nவீரராகவ பட்டயம் என்ற சாசனத்தை வழங்கினர். (ஏ ஸ்ரீதரன் மேனோன்\nகேரள வரலாறு பக்கம் 222) திருமுழுக்கு அடைந்தவர்கள் ஆலயத்தின்\nவடக்கு பக்கத்தில் வசித்து வந்தனர். புனித தோமையார்\nதிருவிதாங்கோட்டில் வாழ்ந்த காலத்தில் திருவள்ளுவர் என்ற மகான்\nதிருவிதாங்கோடு அருகில் உள்ள திருநாயினார் குறிச்சி என்ற இடத்தில்\nவசித்தார் திருவள்ளுவருடைய திருக்குறள் என்ற சுவடியில் கிறிஸ்தவ\nவசனத்தை காண முடியும்.\nஇது இவர்கள் தம்மில் உள்ள உறவை உறுதி படுத்துகின்றது.\nதிருவள்ளுவரில் தோமயாருடைய போதனைகள் ஆதிக்கம்\nசெலுத்தியிருந்ததாக கருதுவதில் தவறு இல்லை. தோமையார்\n12",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 13,
      "ocrText": "திருவிதாங்கோடு வந்தார் என்று கூறப்படும் வரலாற்று சுவடுகளும்\nசங்ககால காப்பியங்களும் இப்பொழுதும் உள்ளன. சங்ககால\nகாப்பியங்களில் கிறிஸ்தவ சிந்தனைகள் கிறிஸ்தவ ஒருமைப்பாடு\nகாணமுடிகிறது. சில பகுதிகளின் இடப்பெயர்களும் தோமையாருடைய\nநினைவை நமக்கு உணர்த்துகிறது.\nமுடிவுரை :\nவரலாற்று சுவடுகளின் குறைவினாலும் தேவைககேற்ற கவனம்\nசெலுத்தாமல் போன ஒன்றுதான் திருவிதாங்கோடு புனித மேரிமாதா\nதேவாலயம். இங்கே இருந்த கிறிஸ்தவ சமூகமும் மலங்கரை சபையுடைய\nமூன்றாம் கத்தோலிக்க புனித பெசேலியோஸ் ஹீவர்க்கீஸ் திதியன்\nபாபாயுடைய காலத்தில் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் சபை\nகவனம் செலுத்தியது. கி.பி. 1942-ல் ஹீவர்க்கீஸ் றம்பான் இதற்காக\nநியமிக்கப்பட்டார். அவருடைய காலத்திற்கு பிறகு மீண்டும் கோயில்\nசபையினுடைய கவனத்தில் நின்று பின்தள்ளப்பட்டது. இன்று மீண்டும்\nஇச்சபைக்கு முக்கியதுவம் கொடுத்து மக்கள் கவனம் செலுத்தவேண்டி\nஉற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பற்பல சாதி மதத்தினரும் இன்று இந்த\nஆலயத்தில் ஜெபிப்பதற்காக வருகிறார்கள். புனித தோமையாருடைய\nநற்செய்தியின் அடையாளமாக திருவிதாங்கோடு கோயில் உள்ளது.\nபுனித தோமையார் பாரதத்தில் நற்செய்தி அறிவித்தின் ஒரு மைல்கல்\nஆக திருவிதாங்கோடு தேவாலயம் உள்ளது.\nதிருவிதாங்கோடு கோயிலின் அற்புத எண்ணெய் :\nதிருவிதாங்கோடு தேவாலயத்தில் உள்ள திருவிளக்கில் உள்ள\nஎண்ணெய் அதிக பிரசித்தி பெற்றது. பலசாதி மதத்தினரான விசுவாசிகள்\nஇதை வீடுகளில் பாதுகாப்பதுண்டு. கோவில்களிலும் மற்ற\nகாரியங்களுக்கும் இந்த எண்ணெயை விசுவாசிகள் பக்தியுடன் இதை\nபயன்படுத்துவதுண்டு. அநேக அற்புத நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததாக\nகூறுவதுண்டு. ஏராளமானோர் மகப்பேறு அடைந்து, நோய் மாறி சுகம்\nஅடைந்தவராயும் விசுவாசிகள் சாட்சியம் அளிக்கின்றார்கள். அதிக\n13",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 14,
      "ocrText": "தொலை இடங்களில் இருந்து ஏராளமானோர் விளக்கெண்ணெயை\nதேடி வருவதுண்டு. தோமையாருடைய கைப்பட்ட தேவாலயத்தின்\nஅணையாவிளக்கின் எண்ணெய் ஒரு ஆசீர்வாதத் தைலமாக\nவிளங்குகின்றது. அதிகரித்து வரும் தேவைகள் காரணமாக இங்கே\nவருகிற எல்லா விசுவாசிகளுக்கும் தனித்தனியாக தயார்செய்த சிறு\nகுப்பிகளில் கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு தேவையான எண்ணெயை\nவிசுவாசிகள் காணிக்கையாக அளித்துவருகின்றன.\n14",
      "status": "completed"
    }
  ]
}