{
  "bookName": "அரப்பள்ளி",
  "authorName": "அருட்திரு. ஜோர்ஜ் K. வர்கீஸ்",
  "publisherName": "உயர் அருட்திரு. பஸிலியீஸ் ரம்பான்",
  "publicationYear": 2010,
  "chapterNumber": 1,
  "chapterName": "திருவிதாங்கோடு தேவாலயமும், மார்த்தோமான் பாரம்பரியமும்",
  "pageFrom": 5,
  "pageTo": 9,
  "pages": [
    {
      "pageNumber": 5,
      "ocrText": "திருவிதாங்கோடு தேவாலயமும்\nமார்த்தோமன் பாரம்பரியமும்\nடாக்டர். கப்றீயேல் மார் கிரிகோரியோஸ்\nமெத்றாபோலித்தா\nமுன்னுரை :\nகிறிஸ்துவின் சீடராகிய புனித தோமையார் கி.பி. 63-ல் நிறுவிய\nதிருவிதாங்கோடு புனித மேரிமாதா தேவாலயம் இன்று ஒரு உலகளாவிய\nதிருத்தலமாக விளங்குகிறது. இந்த வரலாற்று முக்கியத்துவமான\nதேவாலயம் நூற்றாண்டுகளாக பிரசித்தியில்லாமல் இருந்தாலும் இப்போது\nஅரப்பள்ளியில் எல்லா மதத்தைசார்ந்த மக்களும் இங்கு வருகை தந்து\nஅருள்வரங்களை பெற்றுச் செல்கிறார்கள்.\nஅரப்பள்ளி :\nபுனித தோமையாருடன் தொடர்புடைய தென் இந்தியா\nபாரம்பரியத்தில் திருவிதாங்கோடு ஆலயத்தின் முக்கியத்துவம் மிக\nசிறப்பானதாகும். எல்லா வரலாற்று குறிப்புகளிலும் திருவிதாங்கோடு\nதேவாலயத்தின் பெயர் காணப்படுகிறது. அரப்பள்ளி என்று இதனை\nஆதாரபூர்வம் அழைக்கப்படுகிறது. அரை என்றால் பாதி என்பதல்ல\nஅரசன் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசன்\n(அரஜன்) என்ற திராவிட சொல்லுக்கு மன்னன் என்று பொருள், அரசன்\nவசிக்கின்ற வீடு (பவனம்) அரண்மனையும், அரசனுடைய இடத்தில்\nநிற்கின்ற ஆலமரம் அரையாலும் என்பது போல அரசனின் உதவி\nமற்றும் சிறப்பு கண்காணிப்பில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு\nஅரப்பள்ளி என்ற மதிப்புமிக்க பெயர் கைவந்தது.\nதிருவிதாங்கோடின் பழமையும், பெருமையும் :\nசேர பேரரசின் முதல் தலைநகரமாக திருவிதாங்கோடுயிருந்தது.\nதிருவிதாங்கூர் நாட்டின் முதல் பெயர் திருவிதாங்கோடு என்றதாக\n5",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 6,
      "ocrText": "இருந்ததன்றோ. திருவிதாங்கோடின் அடுத்துள்ள பத்மனாபபுரம்\nஅரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். திருவிதாங்கோட்டின்\nபக்கத்தில் உள்ள சின்ன முட்டம்துறைமுகம் முந்நூறு அடி\nஆழமுடையது. இந்த துறைமுகத்தில் கப்பல்கள் கரையில்\nவந்தடைவதற்கு வசதியுண்டு. அரபியர்களும், யூதரும், ரோமரும்\nபாபிலோனியரும் ஆசீரியரும் சீனரும் கேரளத்தில் மற்றுமுள்ள\nதுறைமுகம் போல சின்னமுட்டம் துறைமுகம் வழியும் கிறிஸ்தவ மதம்\nமுதல் நூற்றாண்டுக்கு, முன்பு வியாபாரம் மூலமாக ஏற்பட்டதற்கு\nவரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. புனித தோமையார் திருவிதாங்கோடு\nவந்ததும் சின்ன முட்டம் துறைமுகம் வழியாக என்று கருதப்படுகிறது.\nமார் தோமா பாரம்பரியம் :\nபுனித தோமையார் நிறுவிய திருவிதாங்கோடு ஆலயத்தை\nஅந்த பகுதி மக்கள் தோமையார் கோவில் என்று அழைத்து\nஆதரிக்கிறார்கள். தோமையாரிடமிருந்து திருமுழுக்கு பெற்றதாக\nபரம்பரையாக நம்பபடுகின்ற திருவிதாங்கோட்டின் பக்கத்தில் உதயகிரி\nபகுதியில் உள்ள அமலகிரி அம்மன் குடும்பம் வசித்திருந்த இடத்தை\nதோமையார் தோட்டம் என்றும் அழைக்கிறார்கள். இவருடைய\nபக்கத்தில் புனிதேமையாரின் காலமுதலுள்ள குடும்பத்தின்\nதலைவருடைய பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ள\nஓலைசுவடுமுள்ளது. இன்று ஓர்த்தடோக்ஸ் சபை பாதுகாத்துவரும் வீர\nராகவப்பட்டயம் இந்த குடும்பத்திற்கு கிடைத்ததாக அவர்கள்\nஉரிமைப்படுகின்றார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் ஐந்தாம்\nநூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்திருந்த இரவிக்கொற்றன் ஆசான்,\nகொற்றவடுகன் ஆசான் என்பவர்களுக்கு மந்தாரசேரன் என்ற சேரன்\nராஜா எழுதி கொடுத்த முக்கியமான பட்டயம் என்று அவர்கள் உரிமை\nகொண்டாடுகின்றனர். அமலகிரி அம்மன் குடும்பத்தின்\nகுடும்பத்தலைவர்களின் பட்டியலில் முதலில் சொன்ன பெயர்களும்\nஉள்படுகிறது. புனித தோமையார் வந்திறங்கிய சின்ன முட்டம்\nகடற்கரையின் பக்கத்து தெருவில் பதினைந்து அடி அளவில்\n6",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 7,
      "ocrText": "உயரமுள்ள பழமையான பெரிய கல்சிலுவை காணலாம். இது\nதோமையார் சிலுவை என்று அறியப்படுகிறது. அங்கே புனித\nதோமையாரின் ஆசிர்வாதத்தில் அடைக்கலம் கொண்டு அநேக மக்கள்\nகாணிக்கை பொருட்களுமாக வழிபட செல்கிறார்கள். கடலோரத்தில்\nஒரு பழைய கிணறு காணப்படுகிறது. இதனை தோமையார் கிணறு என்று\nஅழைக்கிறார்கள் உபயோகமில்லாதிருந்த தண்ணீர் தோமையார் ஜெபம்\nசெய்து நன்னீர் ஆக மாற்றினார் என்பது பாரம்பரியம். இந்த தண்ணீரை\nஇன்றும் மக்கள் பக்தியோடு அருந்துகின்றனர். சின்ன முட்டத்தின்\nபக்கத்தில் முட்டம் பகுதியில் மணக்குடி என்ற இடத்தில் புனித\nசெபஸ்தியாரின் பெயரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் உண்டு. இது\nதோமையார் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.\nதரிஸப்பள்ளி :\nபுனித தோமையார் திருவிதாங்கோடில் துவங்கிய புனித\nமேரிமாதா தேவாலயம் தோமையார் கோவில் என்று மட்டுமல்ல\nதரீஸாகோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த குடும்பங்கள் கதரீயா\nகுடும்பங்கள் என்ற பெயரில் கோவிலுக்கு தெற்கு பக்கமாய் தோமையார்\nகிறிஸ்தவர்கள் வசித்து கொண்டிருக்கின்ற தெரு இன்றும் தரிசா தெரு\nஎன்று அழைக்கப்படுகிறது. தரிதாய்க்கல் மாறாது என்றொரு சொல்லும்\nகாணலாம். தரீஸா என்ற பெயர் த்றீசோ (தரீஸா) என்று சுரியானி\nசொல்லுடைய ஒரு மருவாகும். இதற்கு உண்மையானது தெளிவானது\nஎன பொருள். த்றீஸாயீ ஷப்கோ என்பதன் முழு பொருள் உண்மையான\nபுகழ், தெளிவாக்கப்பட்ட புகழ் இது கிரேக்க மொழியில் நின்று வந்த\nஓர்த்தடோக்ஸ் என்ற சொல்லின் சரியான பொருளாகும்.\nதெளிவாக்கப்பட்ட புகழ், விசுவாசம் நிலைநிறுத்துகின்ற கிறிஸ்தவர்கள்\nதரிசாகாரர், அவர்களுடைய கோவில் தரிசாகோவில் என்று\nஅழைக்கப்படுகிறது. கி.பி.4-ம் நூற்றாண்டில் உண்டான வேத விபரீதம்\nஅகற்றி பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் புகழ் என்ற\nதிருத்துவ நாம புகழ் சொல்கின்ற, “ஓடர்த்தடோக்ஸ் நம்பிக்கையை\nபாதுகாத்த கிறிஸ்தவர்கள் திருவிதாங்கோட்டில் தரிசாக்காரர்கள். கி.பி.\n7",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 8,
      "ocrText": "1-ம் நூற்றாண்டு முதல் இன்று வரை சத்திய விசுவாசமும் நம்பிக்கையும்\nதோமையார் மூலமாக பாதுகாத்து நிலைநிற்கிறது என்றபதை தரீசா\nசத்தத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறது.\nமத நல்லிணக்கத்தின் அடையாளம் :\nபுனித தோமையார் திருவிதாங்கோடு வரும்பொழுது சேர\nநாட்டை ஆண்டிருந்தது. இமயவரம்பநெடுஞ்சேரலாதன் ஆகும் அந்த\nஇடம் திருவிதாங்கோடு ஆகும். இமயவரம்பன் பெரிய கோட்டைகள்,\nதேவாலயங்கள், அரசமாளிகைகளும் கட்டுவதற்காக அதிகமாக\nகாடுகளை அழித்தார் என்று சங்ககால காப்பியங்களில் ஒன்றான பதிற்று\nபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (1-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று\nகருதப்படுகின்றது). தேவாலய கற்பனை யூதருக்கும் கிறிஸ்தவர்களுக்குள்\nஉருவானதாகும், சூழ்நிலை காரணமாக கிறிஸ்தவ ஆராதனைக்காக\nநிலம் கொடுத்தனர் என்று கருதலாம். பதிற்று பத்தில் குறிப்பிடுகின்ற\nகடவுள் மண என்ற சொல் எல்லாம் எல்லாமான கடவுளின் வீடு என\nஇதை உறுதிப்படுத்துகின்றது. கிறிஸ்துவின் சீடராகிய தோமையாரின்\nசெயல்பாடுகளில் விருப்பமுடையவராகி ஆலயம் கட்ட அனுமதியும்\nவழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த காரணத்தினால் தான்\nநாச்சிலியார் என்ற கவிஞர் இமய வரம்பனை சான்றோர் புரவிலன்\n(சான்றோர்களின் பாதுகாவலர்) என்று பெருமைப்படுத்துகிறார்.\nசான்றோர் என்றால் லத்தீன் மொழியில் Sanctus ஆதாவது\n(பரிசுத்தமானது என்ற சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும்\nஎன்று கருதப்படுகிறது. சான்றோர் என்றால் பரிசுத்தன் என்று பொருள்.\nபண்டைய காலத்தில் கிறிஸ்தவர்களை புனிதர்கள் என்று\nஅழைத்தார்கள். திருவிதாங் கோட்டிலிருந்து சில கிலோமீட்டர்\nதொலைவிலுள்ள திருநயினார்குறிச்சி என்ற இடத்தில் கி.பி. 1-ம்\nநூற்றாண்டில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்ந்திருந்ததாக\nசில வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தோமையாரும்\nதிருவள்ளுவரும் ஓரே இடத்தில் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்று\nநம்பப்படுகிறது. திருக்குறளும் கிறிஸ்தவ நெறிகளும் தம்மில் ஏராளமான\n8",
      "status": "completed"
    },
    {
      "pageNumber": 9,
      "ocrText": "ஒற்றுமையுள்ளது என பண்டைய ஆராய்ச்சிகள் சுட்டி காட்டுகிறது.\nசுருக்கமாக வரலாற்றின் முத்திரைகளும் மதபரத்திலான ஒற்றுமையின்\nஅடையாளமாக திருவிதாங்கோடு விளங்குகிறது. புனித தோமையாரின்\nகால்தடம் பதித்த மிக புகழ் பெற்ற திருத்தலமாகும் திருவிதாங்கோடு\nஅரப்பள்ளி. திருவிதாங்கோடு ஆலயம் உலகளாவிய திருத்தலமாக வளர\nவேண்டியது ஒரு மதத்தினுடைய தேவையல்ல மனித நாகரீகத்திற்கு\nதேவையானது.\n9",
      "status": "completed"
    }
  ]
}